கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு - போலி டாக்டர் மீது வழக்கு

554பார்த்தது
கர்ப்பிணி பெண்களுக்கு கருக்கலைப்பு - போலி டாக்டர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி: கெலமங்கலம் மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் நேற்று முன்தினம் காவேரிப்பட்டணம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு கிளினிக்கில் சோதனை செய்தனர். சாந்தபுரத்தை சேர்ந்த நியமதுல்லா (57) என்பவர் மருத்துவ ஆய்வக தொழில் நுட்பத்தில் டிப்ளமோ படித்து விட்டு நோயளிகளுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் என்பது தெரியவந்தது. மேலும் இவர் கர்ப்பிணிகளுக்கு சட்ட விரோதமாக கருக் கலைப்பு செய்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நியமதுல்லா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி