கோவையில் தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து திருட முயன்ற ராஜா என்ற நபர், மருத்துவமனை காவலாளிகளால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து, சிகிச்சைக்காகச் சென்ற தனது கணவரைத் திருட வந்ததாகத் தவறாக நினைத்து மருத்துவமனை நிர்வாகத்தினர் தாக்கி, ராஜாவை கொன்றுவிட்டதாக அவரின் மனைவி புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து, இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 15 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளனர்.