கொரோனாவின் உருமாறிய ஜே.என் 1 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையின் ஆதம்பாக்கத்தை சேர்ந்த 42 வயது நபர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தற்போது உயிரிழந்துள்ளார். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதற்கு முன்னதாக கோவையில் கொரானா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.