பில்லா-2,
துப்பாக்கி,
அஞ்சான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் தனது பிறந்தநாளை இமயமலையில் கொண்டாடியுள்ளார். அப்போது ஆடை ஏதும் அணியாமல் எடுத்த நிர்வாண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த அவர் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். காட்டில் தனியாக 10 நாட்கள் இருப்பது எனது பழக்கம் என கூறிவிட்டு, வனப்பகுதியில் தீ மூட்டி சமைப்பது, பிளாஸ்டிக்கால் ஆன நூடுல்ஸ் கவரை அங்கே வீசியிருப்பது என அவர் செய்துள்ள காரியத்திற்கு பெரும் எதிர்பலைகள் கிளம்பியுள்ளது.