திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டு பகுதியில் 2 பள்ளி மாணவர்களை பெற்றோர் அழைப்பதாக கூறி வடமாநில இளைஞர்கள் அழைத்துசென்றுள்ளனர். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டதும் வந்த காவலாளியை பார்த்தவுடன், சிறுவனை விட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து ஆசிரியர்களிடம் கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. மேலும், இன்று ஆம்னி காரின்வாகனம் வந்து 4 மாணவர்களை கடத்த முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.