கர்நாடகா: பெங்களூரு ராமமூர்த்தி நகர் அருகே ஹொய்சாளா நகரில் புதிதாக கட்டடப்பட்டு வரும் கட்டடத்திற்கு தொழிலாளியாக கடந்த சில தினங்களுக்கு முன் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக் குமார் என்பவர் வேலைக்குச் சேர்ந்துள்ளார். அப்போது, அங்கு விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை அவர் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகார் அளித்த நிலையில் அபிஷேக்கை கைது செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.