கேரளாவில் சில மாதங்களுக்கு முன்பாக சஷிஷா என்ற பெண்ணுக்கு வெறும் 350 கிராம் எடையில் 'நோவா' என்ற ஆண் குழந்தை பிறந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்ட குழந்தைக்கு மருத்துவர் ரோஜோ ஜாய் தலைமையிலான மருத்துவக் குழு 100 நாட்கள் தொடர் சிகிச்சை கொடுத்த நிலையில் தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர். தெற்காசிய நாடுகளில் மிகக்குறைவான எடையுடன் பிறந்த குழந்தை என்ற பெயரை நோவா பெற்றுள்ளான்.