மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இருந்து, திவாகர் என்ற மாடுபிடி வீரர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர், அவனியாபுரத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் பைக் பரிசு வென்ற நிலையில் மீண்டும் அலங்காநல்லூரில் களமிறங்கியுள்ளார். இது விதிகளின் படி தவறு. இதனைக் கண்டுப்பிடித்த அதிகாரிகள், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டில் ஒரு போட்டியில் பங்கேற்ற காளைகளும், வீரர்களும் மற்ற போட்டிகளில் களமிறங்க கூடாது என்பது விதி.