ஜல்லிக்கட்டு: வீரர்களைப் பந்தாடிய காளை (வீடியோ)

55பார்த்தது
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வீரர்கள் உற்சாகமாக காளைகளை அடக்கி வருகின்றனர். மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வாரி வழங்கப்பட்டு வருகின்றன. மதுரை சார்லஸ் ஹோட்டலின் காளை வந்தபோது வீரர்கள் தெறித்து ஓடினர். 'எத்தனை பேர் வேணா வாங்கடா நான் பார்த்துக்கொள்கிறேன்' என்பது போல காளை வீரர்களை பந்தாடியது.

நன்றி: Sun News

தொடர்புடைய செய்தி