இந்திய கடற்படைக்காக தயார் செய்யப்பட்டுள்ள ஐ.என்.எஸ்., சூரத், ஐ.என்.எஸ்., நீலகிரி, ஐ.என்.எஸ்., வாக்சீர் ஆகிய மூன்று கப்பல்களை, இன்று (ஜன., 15) பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “மூன்று முன்னணி போர்க்கப்பல்கள் மும்பை கடற்படை கப்பல் கட்டும் தளத்தில் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று போர்க்கப்பல்களும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது பெருமைக்குரிய விஷயம்” என்றார்.