பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. 8 சுற்றுகள் முடிவில் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வான 32 பேர் இறுதிச்சுற்றில் களமிறங்கினர். இந்நிலையில், இறுதி சுற்று முடிவில் 14 காளைகளை அடக்கிய பார்த்திபன் வெற்றி பெற்று பரிசை தட்டிச்சென்றுள்ளார். அவரை தொடர்ந்து மஞ்சம்பட்டி துளசி 12 காளைகளை அடக்கி 2ஆம் இடத்தையும், 11 காளைகளை அடக்கி பிரபாகரன் 3ஆம் இடத்தை பிடித்துள்ளனர். முதலாம் இடத்தை பிடித்த பார்த்திபனுக்கு கார் பரிசு வழங்கப்பட்டுள்ளது.