விறுவிறுப்பாக நடைபெற்று வந்த மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவுபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியில் மொத்தம் 989 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 8 சுற்றுக்களில் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்ட 43 பேர் இறுதிச் சுற்றில் களமிறங்கினர். 20 காளைகளை அடக்கி அபி சித்தர் என்பவர் முதலிடம் பிடித்தார். 14 காளைகளை அடக்கி ஶ்ரீதர் என்பவர் இரண்டாம் இடம் பிடித்தார். 10 காளைகளை அடக்கிய விக்னேஷ் மூன்றாம் இடம் பிடித்தார்.