தமிழக துணை முதலமைச்சரின் மகன் இன்பநிதியின் நண்பர்களுக்காக மதுரை ஆட்சியர் அவமதிக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “ஜல்லிக்கட்டு விழா மேடையில் தனது மகனின் நண்பர்களை அமர வைப்பதற்காக, நாற்காலியில் அமர்ந்திருந்த மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா அவர்களை, மேடையில் இருந்து அகற்றியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது, தமிழகத்தின் இருண்ட காலமான திமுகவின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட மோசமான அதிகார துஷ்பிரயோகம்” என குறிப்பிட்டுள்ளார்.