சிவகங்கை மாவட்டத்தின் சிராவயல் ஊராட்சியில் இன்று (ஜன. 16) மஞ்சுவிரட்டு போட்டியின் போது காளை ஒன்று கண்மாயில் இறங்கியது. இதையடுத்து மாட்டை பிடிப்பதற்கு அதன் உரிமையாளரான சைனீஸ் ராஜா என்பவர் தண்ணீரில் இறங்கினார். அப்போது குளத்தில் படர்ந்திருந்த தாமரை கொடியில் சிக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதே போல அவரின் காளையும் உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.