டோர் ஸ்டெப் ஆதார் ஏடிஎம் திட்டத்தின் மூலம் ஏடிஎம் செல்லாமல் வீட்டில் இருந்தபடியே பணத்தைப் பெற, முதலில் https://ippbonline.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். அதன் பிறகு மைக்ரோ ஏடிஎம் மூலம் தபால்காரர் வீட்டிற்கு வருவார். வாடிக்கையாளர்கள் பயோமெட்ரிக் அடையாளத்தை சரிபார்க்கப்பட்டவுடன், தபால்காரர் பணத்தை உங்களிடம் அளிப்பார். இந்த சேவையில் ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சமாக ரூ.10,000 பெறலாம். சேவை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.