இந்திய கடற்படை கப்பலான ஷர்துல், முதல் பயிற்சிப் படை முகாமின் ஒரு பகுதியாக துபாய் சென்றடைந்துள்ளது.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல், இயங்கக்கூடிய தன்மை மற்றும் நல்லுறவை வளர்ப்பதை மையப் பொருளாக கொண்டு இந்த பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.