பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

63பார்த்தது
பாம்பன் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் உருவான ரெமல் புயல் இன்று(மே 26) வங்கதேசத்தில் கரையை கடக்கிறது. இதனால் கடலில் 110 முதல் 120 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசும் என கூறப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன்னார்வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடும் விதமாக பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி