பள்ளிகள் திறப்பு.. முன் ஏற்பாடுகள் குறித்து சுற்றறிக்கை

54பார்த்தது
பள்ளிகள் திறப்பு.. முன் ஏற்பாடுகள் குறித்து சுற்றறிக்கை
தமிழ்நாட்டில் வரும் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ளநிலையில் முன் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், “பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள், பிற அறைகள் மற்றும் பள்ளி வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். பள்ளி வளாகத்தினுள் அமைந்துள்ள மரங்களில் ஒடிந்த கிளைகள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையூறாக அமைந்துள்ள கிளைகளை அகற்ற வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு முன் ஏற்பாடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.