புயல் எதிரொலி: தனுஷ் கோடியில் கடுமையான கடல் அரிப்பு

64பார்த்தது
புயல் எதிரொலி: தனுஷ் கோடியில் கடுமையான கடல் அரிப்பு
வங்கக் கடலில் உருவான ரெமல் புயல் வடக்கு திசை நோக்கி நகர்ந்து வங்கதேசம் - மேற்கு வங்கம் இடையே இன்று (மே 26) கரையை கடக்கிறது. இந்த புயலின் எதிரொலியாக ராமநாதபுரம் ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடியில் 700 மீட்டர் தூரத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் ராமேஸ்வரம் கடற்கரையில் 300 மீட்டருக்கு கடல் உள்வாங்கியதால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கப்பல்கள் தரை தட்டத் தொடங்கின. வழக்கத்திற்கு மாறாக சில நாட்களாக தனுஷ்கோடியில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்தி