கர்நாடகாவில் அன்னை நிமிஷாம்பாளுக்கு முதன் முதலில் கோயில் எழுப்பப்பட்டது. தமிழகத்தில் நிமிஷாம்பாளுக்கு கோயில் இருப்பது சென்னை சவுகார்பேட்டை பகுதியில் மட்டும் தான். 400 ஆண்டுகளுக்கு முன் இந்த கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஒரே ஒரு பார்வையில் பக்தர்களின் துன்பங்களை சம்ஹாரம் செய்து, அவர்கள் வேண்டிய வரங்களை கொடுக்கக் கூடியவள் என்பதால் இந்த அம்பிகைக்கு நிமிஷாம்பாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.