உதகை நகருக்குள் உலா வந்த காட்டு மாடு

83பார்த்தது
இரவு நேரத்தில் நகருக்குள் உலா வந்த காட்டு மாடு பொதுமக்கள் அச்சம்

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் சுமார் 55 சதவீதம் வனப்பகுதியைக் கொண்ட மாவட்டமாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டு மாடு, கரடி, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் உதகை பகுதியில் இரவு நேரங்களில் புலி, சிறுத்தை, கரடி, காட்டுமாடு உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி சமீப காலமாக உலா வருவது தொடர் கதையாக உள்ளது.

இந்நிலையில் உதகை பகுதியில் இருந்து சேரிங்கிராஸ் பகுதியில் ஒற்றைக் காட்டு மாடு நகருக்குள் உலா வந்ததால் வாகன ஓட்டிகள் மற்றும் வணிக வியாபாரிகள் பெருமச்சமடைந்தனர் இதனைத் தொடர்ந்து காட்டு மாடு அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்ததுஇதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி