விலை உயர்வுக் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்

77பார்த்தது
உதகை கேரட் விலை உயர்வுக் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட்களுக்கு கடந்த சில தினங்களாக ஒரு கிலோவிற்கு குறைந்த பட்சம்  50  ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்ட விவசாயிகள், தேயிலைக்கு அடுத்தபடியாக கேரட், பீட்ரூட், உருளை கிழங்கு, உள்ளிட்ட காய்கறிகளை அதிகமாக சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளைவிக்கப்படும்  கேரட், மாவட்டத்தில் உள்ள 60 கேரட்,   கழுவும் நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு சுத்தம் செய்து வெளிமாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

நாள் ஒன்றுக்கு 400 முதல்  500 டன் வரை விற்பனை  செய்யப்பட்டு வரும் நிலையில்,   தற்போது கேரட்டிற்கு நல்ல விலையும் கிடைத்து வருகிறது,

தற்போது கிலாே ஒன்றுக்கு 50 ரூபாய் முதல் 90 ரூபாய்  வரை விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி  அடைந்துள்ளனர். பச்சை  தேயிலைக்கு விலை கிடைக்காத நிலையில் கேரட்டிற்கு  கூடுதல் விலை கிடைத்து வருவது மலைத் தோட்ட காய்கறி விவசாயிகளுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி