உதகை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக இன்றைய தினம் நீலகிரி மாவட்ட படுகர் சங்கத்தினர் சார்பில் காமதேனு வாகனத்தில் ஹெத்தையம்மனாக அலங்கரித்து திருவீதி உலா நடைபெற்றது.
இதில் காலை முதலே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் பஜனைகள், ஆடல் பாடல்களுடன் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. படுகர் இனத்தின் திருவிழா மதியம் ஒன்றரை மணி அளவில் அம்மனின் திருவீதி உலா உதகையில் உள்ள மையப் பகுதியில் முக்கிய பகுதிகளிலும் நடைபெற்றது. இதில் ஆடல், பாடல், வானவேடிக்கை என கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.