உதகையில் பூத்துக் குலுங்கும் காட்டு டேலியா மலர்கள்

68பார்த்தது
*உதகையில் உள்ள மலைகளில் பூத்துக் குலுங்கும் காட்டு டேலியா மலர்கள்*.
*இரண்டாவது சீசனுக்கு உதகை வரும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது*

இயற்கை எழில் கொஞ்சம் நீலகிரி மாவட்டம் உதகையில்  தற்போது இதமான காலநிலை நிலவி வருகிறது. தற்போது உதகையில் இரண்டாவது சீசன் நடைபெற்ற ஒரு நிலையில் கேரளா , கர்நாடக உட்பட பல்வேறு  மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இரண்டாவது சீசனுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் உதகையில் உள்ள மலைத்தொடர் முழுவதும் காட்டு டேலியா எனப்படும் டேலியா டெனுகாலிஸ் என்று தாவரவியல் பெயரைக் கொண்ட இவ்வகை காட்டு டேலியா மலர்கள் ஆயிர கணக்கில் பூத்துள்ளன. கல்லட்டி மலைப்பாதை ,
உதகையிலிருந்து  குன்னூர் செல்லும் மலைப்பாதை உட்பட உதகை முழுவதும் உள்ள கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் காட்டு டேலியா மலர்கள் பர்பிள் வண்ணங்களில் பூத்துக் குலுங்குகின்றன. தற்போது பூத்துள்ள இவ்வகை மலர்களில் தேனீக்களும், பறவைகளும் தேன் எடுத்துச் செல்லும் காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்கின்றனர். உதகை முழுவதும் பூத்துள்ள இவ்வகை டேலியா மலர்கள்  இம்மாதம் இறுதிவரை பூத்துக் குடும்பம் என தாவரவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுக்கு ஒரு முறை பனிக்காலம் துவங்கும் முன்பு பூக்கக் கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி