கோத்தகிரி மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ள இருளர் பழங்குடியின கிராமத்திற்கு சாலை வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்.
தெரு விளக்கு மற்றும் சாலை வசதி செய்து தரக்கோரி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் முல்லூர் அருகே உள்ளது மாமரம்.
இருந்து அடர்
வனப்பகுதி வழியாக சுமார் 2 கிலோமீட்டர் தொலைவு நடந்து சென்றால் சுண்டப்பட்டு, வெல்லேரிமலை, கூவக்கரை உள்ளிட்ட இருளர் மற்றும் குரும்பர் பழங்குடியின கிராமங்கள் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளதால் சாலை வசதியின்றி பழங்குடியின மக்கள் தினந்தோறும் அத்யாவசிய தேவைகளுக்கு நடந்து சென்று வருகின்றனர்.