ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் உள்ள தனது அதிகாரப்பூர்வ வீட்டை காலி செய்துள்ளார். குடும்ப உறுப்பினர்களுடன் புதிய குடியிருப்புக்கு மாறினார். சமீபத்தில், முதலமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவால், சிறையில் இருந்து அண்மையில் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.