மௌஞ்சாரோ (Mounjaro) ஊசி சில பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குமட்டல், வயிற்றுப்போக்கு, பசியின்மை, வாந்தி, மலச்சிக்கல், வயிற்று வலி, அஜீரணம் போன்ற பொதுவான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். இவை சில நாட்கள் அல்லது ஓரிரு வாரங்கள் நீடிக்கலாம். பக்க விளைவுகள் அதிகமாக உங்களைத் தொந்தரவு செய்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அறிவுரை பெற்றுக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மருந்தை மருத்துவர் ஆலோசனையின்றி எடுத்துக் கொள்ளக் கூடாது.