நீலகிரியில் நேர்ந்த சோகம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

60பார்த்தது
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள கேத்தி அரக்காடு பகுதியில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த ஜோசப் ராய் இவருக்கு தன்வி வயது (3) மன்வி வயது (2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர் இவர் கடந்த ஒரு வருடமாக ஊட்டி கவர்னர் சோலை பகுதியில் தங்கியிருந்து கேத்தி அரக்காடு பகுதியில் உள்ள காளான் தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்த நிலையில் நேற்றைய தினம் ஜோசப் ராய் மற்றும் அவரது மனைவி காளான் கம்பெனியில் பணியில் இருந்த போது அவரது இரண்டு குழந்தைகளும் காளான் பண்ணைக்கு அருகில் உள்ள இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர் பெற்றோர்கள் வேலையில் மும்முரமாக இருந்ததால் குழந்தைகள் நடந்து சென்று அருகில் இருந்த குட்டையின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர் நேற்று மாலை (4) மணி அளவில் மின்வி குட்டை தண்ணீரில் விழுந்துள்ளார் அதனைப் பார்த்த மற்றொரு குழந்தை தன்வி அழுது கொண்டிருக்கும் சப்தம் கேட்டதால் பெற்றோர் மற்றும் அங்கு பணியாற்றியவர்கள் வெளியில் வந்து பார்த்தபோது மன்வி தண்ணீரில் மிதந்தவாறு கடந்துள்ளார் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அங்கு பணியாற்றியவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர் இதனை தொடர்ந்து குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி