நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இரவு நேரத்தில் நான்கு பெரிய கரடிகள் குடியிருப்பு பகுதியில் உலா வந்த சிசிடிவி கேமரா பதிவு.
சர்வசாதாரணமாக குடியிருப்பு பகுதியில் உலா வரும் நான்கு பெரிய கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க பொதுமக்கள் கோரிக்கை.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டு வருகிறது.
குறிப்பாக குடியிருப்பு பகுதிகள், தேயிலை தோட்ட பகுதிகளில் உலா வரத்தொடங்குவதோடு மட்டும் அல்லாமல் இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிக்குள் வீடுகளை உடைத்து சேதப்படுத்துவது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் இரவு நேரத்தில் கோத்தகிரி அருகே உள்ள அரவேணு பெரியார் நகர் பகுதியில் இரவு நேரத்தில் பெரிய நான்கு கரடி உலா வந்துள்ளது.
இந்த காட்சி குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில் குடியிருப்பு வாசிகளை பெரிதும் அச்சமடைய செய்துள்ளது.
எனவே குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடிகளை உடனே கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.