தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிக்கு வந்த மாவோயிஸ்ட்கள்

1042பார்த்தது
நீலகிரி மாவட்டம் கூடலூர் கேரளா எல்லையை ஒட்டியுள்ள மாணந்தவாடி, தல புழா தேயிலை எஸ்டேட் குடியிருப்புக்கு இன்று காலை 6 மணி அளவில் நான்கு மாவோயிஸ்டுகள் ஆயுதத்துடன் வந்து தோட்ட தொழிலாளர்களிடம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கும் படியும் உங்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ உதவிகள் மருத்துவமனை, மின் இணைப்புகள் இல்லை என்றும் அதனால் தாங்கள் அனைவரும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கோஷமிட்டதாகவும் வந்தவர்கள் மூன்று துப்பாக்கிகள் வைத்திருந்ததாகவும் மேலும் சீருடை இருந்ததாகவும் எஸ்டேட் தொழிலாளர்கள் கூறுகின்றனர்

நான்கு மாவோயிஸ்டுகளும் 20 நிமிடம் பேசியதாகவும் பின்பு வனப்பகுதிக்கு சென்று விட்டதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்த தண்டர்போல்ட் காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை மற்றும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்தி