நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கிணறு தோண்டிய போது பாறைக்கு வெடி வைத்த வழக்கில் மேலூம் ஒருவர் கைது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது சேலாஸ் கெந்தளா இந்த கிராமத்தில் வசிப்பவர் சுரேஷ் இவரது தேயிலை தோட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே அனுமதி பெறாமல் கிணறு ஒன்றை தோண்டி வந்துள்ளார் அப்பொழுது தோண்டும் கிணற்றில் பாறை இருந்ததால் அதனை வெடிவைத்து தகர்த்தனர்அப்பகுதியில்குடியிருப்பு இருந்ததால்குடியிருப்பு வாசிகள் வருவாய்த் துறைக்கு தகவல் அளித்தனர் இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர் கொலக்கம்பை காவல் நிலையத்தில்புகார் அளித்ததை தொடர்ந்து குன்னூர் துணை கண்காணிப்பாளர் குமார் உத்தரவின் படி கொலக்கம்பை ஆய்வாளர் அன்பரசு மற்றும் உதவி ஆய்வாளர் இளையராஜா மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முதற்கட்டமாக தோட்ட உரிமையாளர் சுரேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
மேலும் கிணறு வெட்ட வெடி மருந்து பயன்படுத்திய கோத்தகிரி குண்டடா பிரிவு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த சுந்தர் என்பவரை தேடி வந்தனர் இந்நிலையில் நேற்றைய முன்தினம் இரவு ரகசிய தகவலின் பெயரில் கொலக்கம்பை உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையில் தனிப்படை காவல்துறையினர் திருச்சியில் தலைமறைவாக இருந்த சுந்தரை இரவோடு இரவாக தட்டி தூக்கி கைது செய்து குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.