வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக நம்மிடம் பல இயற்கையான இனிப்பு வகைகள் இருக்கின்றன. கலப்படமில்லாத தேனை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம். பேரிச்சம்பழத்தில் இனிப்பு இருக்கிறது. ஆனால், நேரடியாக பயன்படுத்த முடியாது. சந்தையில் கிடைக்கும் பேரிச்சம்பழத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட சர்க்கரையை பயன்படுத்தலாம். தென்னம்பாளையில் இருந்து தயாரிக்கப்படும் தேங்காய் சர்க்கரையை பயன்படுத்தலாம். பிரௌன் சுகர், வெல்லம் பயன்படுத்தலாம்.