நீலகிரியில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு...

555பார்த்தது
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்றைய தினம் துணை நடிகர் விஜய் விஸ்வா தனது நண்பர்களுடன் தனியார் ஹோட்டலில் உணவு அருந்திய போது தக்காளி சாஸில் புழு இருந்ததாக கூறி விஜய் விஸ்வா பிரச்சனையில் ஈடுபட்டார் அப்போது மேலாளர் டோமினிக் விஜய் விஸ்வாவின் காலை பிடித்து என்று கதறினார் இருந்தாலும் மனமிரங்காத விஜய் விசுவா சமூக வலைதளங்களில் வீடியோக்களை பகிர்ந்து தனது விளம்பரத்திற்காக பிரச்சனையில் ஈடுபட்டார் இதனைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் இன்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி நந்தகுமார் சம்பவம் நடந்த ஹோட்டலை ஆய்வு மேற்கொண்டார்.

நேற்றைய தினம் மதியம் 12 மணி அளவில் நடந்த சம்பவத்திற்கு இன்று அதே 12 மணி அளவில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நந்தகுமார் 24 மணி நேரம் தாமதமாக வந்து ஆய்வு மேற்கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரி நந்தகுமார் கூறுகையில் நீலகிரி மாவட்டத்தில் மூன்று பேர் மட்டுமே அத்துறையில் உள்ளதாகவும் அதனால் உடனடியாக வர முடியவில்லை என்றும் தெரிவித்தார் மேலும் 24 மணி நேரம் கடந்து ஆய்வு செய்ய வந்தால் அதுவரை ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் ஹோட்டலை சுத்தம் செய்யாமல் வைத்திருப்பார்களா என்ற கேள்வியும் எழுகிறது.

துணை நடிகர் விஜய் விஸ்வா நேற்று தகவல் தெரிவித்தும் தகவல் தெரிந்தும் 24 மணி நேரத்திற்கு பின் ஆய்வுக்கு வந்தது எதனால் என்று செய்தியாளர்கள் கேள்வி

தொடர்புடைய செய்தி