பூட்டி இருந்த வீட்டின் கதவை திறந்து நகை திருட்டு
கோவை வெங்கடாபுரம் நேதாஜி காலனியைச் சேர்ந்தவர் மதன்குமார் (30). இவர் வேலைக்கு செல்லும் போது வீட்டை பூட்டிவிட்டு சாவியை மின்பெட்டி அருகே வைத்து விட்டு செல்வது வழக்கம். சம்பவத்தன்று அவருடைய மனைவி வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது இரண்டு பவுன் தங்கச் சங்கலியை காணவில்லை. இது குறித்த புகாரின் பேரில் சாய்பாபா காலனி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் சாவியை வைக்கும் இடத்தை நோட்டமிட்ட மர்ம நபர்கள், கதவை திறந்து நகையை திருடி சென்றது தெரிய வந்தது. அருகில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.