விஷாலின் 'ரத்னம்' படத்தின் அடுத்த அப்டேட்

59பார்த்தது
விஷாலின் 'ரத்னம்' படத்தின் அடுத்த அப்டேட்
தாமிரபரணி, பூஜை படங்களுக்குப் பிறகு ஹரி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் 'ரத்னம்'. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ரத்னம் திரைப்படம் ஏப்ரல் 26 அன்று திரைக்கு வர உள்ளது. படத்தின் 2 பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் டிரைலரும் வெளியாகி, இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 45 நிமிடம் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி