அப்பாவோட ஆசை, கனவை நிறைவேற்றுவேன்

55பார்த்தது
அப்பாவோட ஆசை, கனவை நிறைவேற்றுவேன்
ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு வியூகம் இருக்கும். ஜூன் 4ம் தேதி அன்று மக்களின் தீர்ப்பின் மூலம் தெரியும். எந்தக் கூட்டணி உண்மையான பலமான கூட்டணி என்று. ஒரு நாள் இங்கு வருவேன் என்று எனக்கு தெரியும். விஜயகாந்த் மகன் என்ற பொறுப்பு சின்ன வயசுல இருந்தேதான் இருக்கிறது. இன்னும் இந்த கூடுதல் பொறுப்பை கஷ்டமாகவோ, சுமையாகவோ பார்க்கவில்லை. எங்க அப்பாவுடைய ஆசையையும், கனவையும், நிறைவேற்றுவதற்கு ஒரு வழி எனக்கு கிடைத்திருக்கிறது. கண்டிப்பாக இந்த தேர்தலில் வெற்றிபெற்று எங்க அப்பாவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி