ஸ்ட்ராங் ரூம் வழக்கு - கூடுதல் சிசிடிவி பொருத்த முடிவு

72பார்த்தது
ஸ்ட்ராங் ரூம் வழக்கு - கூடுதல் சிசிடிவி பொருத்த முடிவு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்தது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, விசாரிக்க கோரி எம்.எல்.ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், பாதுகாப்பு அறைகளில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்களை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இந்த பதிலை பதிவு செய்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்தது.

தொடர்புடைய செய்தி