ஓம் பிர்லாவை NDA ஆதரிப்பது ஆபத்து!

59பார்த்தது
ஓம் பிர்லாவை NDA ஆதரிப்பது ஆபத்து!
மக்களவை சபாநாயகர் பொறுப்புக்கு ஓம் பிர்லாவை முன்னிறுத்துகிறது பாஜக. 130 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்தவர் ஓம் பிர்லா. பாஜக ஆதரவு குழுவின் பரிந்துரையில் மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்தவர். சிவசேனாவின் நாடாளுமன்ற அலுவலகத்தை ஷிண்டே குழுவுக்கு அளித்து, கட்சி உடைத்தவர்களை அங்கீகரித்தவர். தெலுங்கு தேசம் கட்சியும் ஐக்கிய ஜனதா தளமும் ஓம் பிர்லாவை ஆதரித்தால், தங்களின் கட்சிகளையும் பாஜக உடைப்பதற்கு வாய்ப்பளித்ததாக அது மாறும் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி