அங்கக விவசாயிகள் 3 பேருக்கு நம்மாழ்வார் விருது

79பார்த்தது
அங்கக விவசாயிகள் 3 பேருக்கு நம்மாழ்வார் விருது
நம்மாழ்வார் விருதுக்கு 3 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் மகர்நோன்புச்சாவடியை சேர்ந்த கோ.சித்தர் என்ற விவசாயிக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம் ரொக்கம், சான்றிதழ், பதக்கம் ஆகியவையும், திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை சேர்ந்த கே.வெ.பழனிசாமிக்கு 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், சான்றிதழ், பதக்கமும், காஞ்சிபுரம் மாவட்டம் அஞ்சுகட்டு கிராமத்தை சேர்ந்த கு.எழிலனுக்கு 3-ம் பரிசாக ரூ.1 லட்சம், சான்றிதழ், பதக்கமும் வழங்கப்படுகிறது.