
மல்லசமுத்திரம்: தீரன்சின்னமலை பிறந்த விழா
வீரன் சின்னமலையின் பிறந்தநாள் விழா இன்று 17ஆம் தேதி வெகு சிறப்பாக பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியத்தில் தீரன் சின்னமலையின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த மல்லசமுத்திரம் ஒன்றிய நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.