மோளிப்பள்ளி கந்தசாமி கோயிலில் வைகாசி மாதம் கிருத்திகையை பூஜை

85பார்த்தது
மோளிப்பள்ளி கந்தசாமி கோயிலில் வைகாசி மாதம் கிருத்திகையை பூஜை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள மோளிப்பள்ளி கந்தசாமி கோயிலில் மாதம் தோறும் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெறும். நேற்று வைகாசி மாதம் கிருத்திகையை முன்னிட்டு முன்னதாக சுவாமிக்கு பால், பஞ்சாமிருதம், மஞ்சள், திருமஞ்சள், பன்னீர், திருநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. விழாவிற்கு சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வந்திருந்த பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி