மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், நாளை திங்கட்கிழமை முதல் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை நிறைவு பெறுவதால், இன்று வழக்கத்தை காட்டிலும் கொல்லிமலையில் அதிகளவு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கிய அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.