நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரம், நெசவாளர் காலணி பகுதியில் ரூ. 36. 00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறை கட்டும் பணிகளுக்கு பூமி பூஜை செய்த நிகழ்வு நடைபெற்றது. இதில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நகர கழக செயலாளர் கார்த்திகேயன், நகர மன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.