பாமக, பிற்படுத்தபட்ட மக்களுக்கு துரோகம் செய்வதாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது, "பாமக தங்கள் அரசியல் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு மிகவும் பிற்படுத்தபட்ட மக்களுக்கு துரோகத்தை மட்டுமே செய்து வருகிறது. மருத்துவராகவும், பொறியாளராகவும், மாவட்ட ஆட்சியராகவும் இன்னபிற அரசின் உயர் பதவிகளில் இடம்பெற வேண்டிய இளைஞர்களை, பாமக தவறமாக வழிநடுத்துகிறது'' என்றார்.