பொதுவெளியில் சில கதாநாயகிகள் தர்மசங்கடமான நிலையில் சிக்கிக்கொள்ளும் சில சம்பவங்களை நாம் கண்டுள்ளோம். இந்நிலையில், நடிகை கியாரா அத்வானி, ஆலியா பட் ஆகியோருடன் நடிகர் வருண் தவான் நடந்துகொண்டது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. இது குறித்து அவரிடம் கேட்ட போது, கியாராவை முத்தமிட்டது திட்டமிட்டதே எனக் கூறி, அவற்றை வேடிக்கையாக செய்ததாகவும், ஆண் நண்பர்களிடமும் தான் அவ்வாறே நடப்பேன், ஆனால் அது குறித்து ஏன் யாரும் பேசவில்லை என கூறியுள்ளார்.