நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஒன்றியம், சேந்தமங்கலம் பேரூர் மற்றும் காளப்பநாயக்கன்பட்டி பேரூரில் கடந்த ஏப்ரல் 2024 முதல் தற்பொழுது வரை மறைந்த 112 திமுக உறுப்பினர்களுக்கு எம்பி ராஜேஷ்குமார் அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தாருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் குடும்ப நல நிதியை சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி முன்னிலையில் வழங்கினார்.
நிகழ்வானது ஒன்றிய கழக செயலாளர் அசோகன் அவர்கள் தலைமையில் பேரூர் கழக செயலாளர்கள் தனபாலன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.