நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான மளிகை கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் போதை பொருட்கள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர்.