இராசிபுரம் வட்டத்தில் 21. 02. 2024 நாளை "உங்களை தேடி உங்கள் ஊரில்”
திட்டம் நடைபெற உள்ளது. இராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் மாலை 4. 00 மணியிலிருந்து 6. 00 மணி வரை
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையிலான அரசுத்துறை அதிகாரிகளை கொண்ட குழுக்கள் மனுக்கள் பெறுகிறது.
பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சேவைகள் விரைவில் கிடைக்க அரசால் துவக்கப்பட்டுள்ள
”உங்களை தேடி உங்கள் ஊரில்”
திட்டம் ஆகும். அதன்படி ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் ஒரு நாள் வட்ட அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும் சேவைகளும் தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை உறுதி செய்ய உள்ளது.