இரவு உணவாக கீரையை எடுத்துக் கொள்வதை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் கீரையில் காணப்படும் பச்சையம், நார்ச்சத்துக்கள் ஆகியவற்றை செரிமானம் செய்யக்கூடிய நொதிகள் இரவு வேளைகளில் குறைந்த அளவிலேயே சுரக்கின்றன. இதன் காரணமாக இரவு நேரத்தில் கீரையை உண்பது ஒரு விதமான மந்த நிலையை வயிற்றுக்குள் ஏற்படுத்திவிடும். செரிமானத்திலும் இடையூறுகள் ஏற்படும். சிலருக்கு இரவில் கீரை உண்பதால் செரிமான கோளாறு ஏற்பட்டு வயிற்றுப்போக்கு கூட ஏற்பட வாய்ப்புள்ளது.