ராசிபுரம்: பழைய வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கக் கோரிக்கை

71பார்த்தது
ராசிபுரம்: பழைய வழித்தடத்தில் பேருந்துகளை இயக்கக் கோரிக்கை
ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டது முதல் சேலம், ஈரோடு, நாமக்கல் மாா்க்கமாக செல்லும் அனைத்து பேருந்துகளும், மாதா கோயில், காஞ்சி சூப்பா் மாா்க்கெட் வழியாகச் சென்று சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளுக்கு சென்றது. கடந்த சில மாதங்களாக, ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஆத்தூா் மாா்க்கமாக சென்று டிவிஎஸ் காா்னா், பூவாயம்மாள் திருமண மண்டபம், கிருஷ்ணா திரையரங்கம், பழைய பேருந்து நிலையம் வழியாகச் சென்று சேலம், ஈரோடு, நாமக்கல் பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.

சாலைப் பணி, இருபுறமும் கழிவுநீா் கால்வாய் அமைப்பது, புதை சாக்கடை அமைப்பதற்காக பள்ளம் தோண்டுவது என தினந்தோறும் போக்குவரத்து ஸ்தம்பித்து வருகிறது. ராசிபுரம் நகராட்சி, போக்குவரத்து காவல் துறை எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாத நிலையில் பேருந்துகள் செல்லும் வழியை தற்காலிகமாக மாற்றம் செய்தனா். இருப்பினும், பேருந்துகள் மாற்று வழியில் சென்று வந்தன.

தற்போது பணிகள் முடிந்து இரண்டு மாதங்களாகிறது. அவ்வாறு இருந்தபோதும் பழைய போக்குவரத்து வழிதடத்தை பின்பற்றாமல் தற்காலிகமாக அமைத்த புதிய வழித்தடத்தையே பின்பற்றி வருகின்றனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திங்கள்கிழமை ஓட்டுநா்கள், பல்வேறு அரசியல் கட்சியினா், ராசிபுரம் நகர மக்கள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி